Saturday, April 27, 2013

நால்வர் காட்டும் நல்வழி-மாணிக்கவாசகர்


மாணிக்கவாசகர்




ணிவாசகரது வாழ்க்கை திருவாதவூரில் அவதரித்துஅரிமர்த்தன பாண்டியனின் முதலமைச்சராகிகுதிரை வாங்க அரசன்தந்த பொருளை திருப்பெருந்துறை கோயில் திருப்பணிக்கு செலவளிக்கவேமன்னன் அவருக்குத் தந்த தண்டனையிலிருந்துஅவரை மீட்க இறைவன் நரியை பரியாக்கி திருவிளையடல் புரிந்தான்பின் அரசுப்பணியிலிருந்து விலகி,திருப்பெருந்துறையில் இறை பணியில் ஈடுபடுத்திக்கொண்டார்அங்கு  திருவாதவூரருக்கு பரமாசாரிய  வடிவில் வந்தசிவபிரான் கல்லால மரத்தின் கீழ் உபதேசித்த முறை ” அருட்குரு” என சைவ சித்தாந்தத்தில் குறிப்பிட்டுள்ள முறையேஆகும்.

திருவாசகத்தில் முதல் நான்கு பகுதிகளான சிவபுராணம்கீர்த்தி திருஅகவல்திருவண்டப்பகுதிபோற்றித் திருவகவல்ஆகியவற்றில் மணிவாசகர் தன் அனுபவங்களையும்உணர்வுகளையும் தத்துவஞானத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.

திருச்சதகம்நீத்தல் விண்ணப்பம் முதலியனவும் தெய்வம் என்பதோர் சித்தம் உண்டாகி தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும் வகையில் அமைந்துள்ளதுதிருவெம்பாவைதிருவம்மானைதிருச்சாழல்திருப்பூவல்லி முதலானவைஉரையாடல் மற்றும் நாடகப் பாங்கான உத்திமுறைகளில் பாடப்பெற்றவை.

ஆனந்த பரவசம் பகுதியில் 
யானே பொய் என் நெஞ்சம் பொய் என் அன்பு பொய்
 ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே

என ஏக்கத்துடன் தன் தகுதி இன்மை பற்றிய தவிப்பை வெளிப்படுத்துகிறார்அதுபோல “நாயினும் கடையேன்” எனத்தன்னைத் தாழ்த்திக் கொள்ளும் பண்பு போற்றத்தக்கது.

வானநாடரும் அறியவொணாத நீ
----------------------------------------
என்னை இனிதாய் ஆண்டு கொண்டவா” என்றும்
என்னை நீ கைவிடலாகாது” என நீத்தல் விண்ணப்பத்தில் வைத்த வேண்டுகோள் கோயில் மூத்த திருப்பதிகத்திலும்தொடர்கிறது.
நெருங்கும் அடியார்களும் நீயும்
மருங்கே சார்ந்து வர எங்கள்
வாழ்வே வா என்று அருளாயே” என்றும்,
குழைத்தப் பத்தில் “வேண்டத்தக்கது அறிவோய் நீ “ எனத் துவங்கி
வேண்டும் பரிசு ஒன்று உண்டென்னில் அதுவும் உந்தன் விருப்பன்றே” என்று முழுமையாக தன்னை இறைவனிடத்தில்ஒப்புவித்த பாங்கின் மூலம் நமக்கு இறைவனை வழிபடும் முறையை அருமையாக வழிகாட்டியுள்ளார்.

இறைவனே குருவாக அமைந்த மணிவாசகப்பெருமான் அந்த நிலையைத் தக்க வைத்துக்கொள்ளும் அவாவில்உயிருண்ணிப்பத்துபிடித்த பத்து ஆகிய பாடல்களில் சிறப்பாக புலப்படுத்தியுள்ளார்.
பிடித்த பத்தில் “அம்மையே அப்பா ஒப்பிலா மணியே”,” பால் நினைந்தூட்டும் தாயுனும் சால” எனத் துவங்கிசிக்கெனப்பிடித்தேன் எங்கெழுந்தருளுவது இனியே” எனப் பதிவு செய்கிறார்.
கோயில் திருப்பதிகத்தில் “தந்தது உன் தன்னை ” எனத் துவங்கி “ சங்கரா ஆர் கொலொ சதுரர்” என்றும் “யான் இதற்கு இலன்ஓர் கைமாறே” என்றும் கூறுகிறார்.  ஆக மாணிக்கவாசகர் குரு சீடன் பாவனையில் சன்மார்க்கத்தைக் காட்டுகிறார்.

சைவ சமய குரவர்கள் நால்வரும் மனித குலம் உய்யும்படி நான்கு நன் மார்க்கங்களைக் காட்டியுள்ளார்கள்நால்வர்பொற்றாள் வணங்கி சைவ நெறியில் வாழ்ந்து உய்வோமாக.
சைவத்தின் மேற் சமயம் வேறில்லை அதிற் சார் சிவமாம்
 தெய்வத்தின் மேல் தெய்வம் இல்லென்னும் நான் மறை செம்பொருள்
 வாய்மை வைத்த சீர்  திருத்தேவாரமும் திருவாசகமும்
 உய்வைத் தரச் செய்த நால்வர் பொற்றாள் எம் உயிர்த் துணையே
                                                                                -அருணைக்கலம்பகம்
                                        திருச்சிற்றம்பலம்.



1 comment:

  1. வணக்கம்
    இன்று வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரி http://blogintamil.blogspot.com/2014/02/thalir-suresh-day-2.html

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete